வட்டுவாகல்.கொம்: முல்லைத்தீவில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம் - வட்டுவாகலில் ஆரம்பம் (முழுமையான படங்கள்)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

முல்லைத்தீவில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம் - வட்டுவாகலில் ஆரம்பம் (முழுமையான படங்கள்)

Posted on
  • செவ்வாய், 2 ஜூன், 2026
  • by
  • in
  • Tags
  •  கிராமப்புற மக்களின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின்கீழ் முல்லைத்தீவில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்.



    கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்கும் திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜா சக்தி - ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" தேசிய வேலைத்திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஆரம்ப விழா, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று (02.06.2026) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வட்டுவாகலில் நடைபெற்றது.















    சமூக அபிவிருத்தி சபையினால் இனங்காணப்பட்ட உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின்கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தின் 136 கிராம அலுவலர் பிரிவுகளுக்காக 357 மில்லியன் ரூபாய் செலவில் 164 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
    இதன் முதலாவது திட்டமாக இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள தானியங்களை உலர்த்தும் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.
    இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்,

    கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்