வட்டுவாகல்.கொம்: விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வினாவிடை போட்டி- சிவராசா ஜானுசா தேசிய வெற்றி-(படம் வீடியோ)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வினாவிடை போட்டி- சிவராசா ஜானுசா தேசிய வெற்றி-(படம் வீடியோ)

Posted on
  • புதன், 12 நவம்பர், 2025
  • by
  • in
  • Tags

  • முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த  மாணவி சிவராசா ஜானுசா அவர்கள், நாடளாவிய ரீதியில் நடைபெற்ற HackX Jr. Inter School Hackathon 8.0 என்ற விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வினாவிடை போட்டியில் சிறப்பாக பங்கேற்று முதன்மை விருதைப் பெற்றார்.

    இவ்விருது வழங்கும் விழா கொழும்பில் உள்ள BMICH மாநாட்டு மண்டபத்தில் மிகுந்த சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில், ஜானுசா அவர்கள் தன் புதுமையான சிந்தனை, அறிவியல் திறன் மற்றும் கடின உழைப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.



    அவரது இச்சிறப்பான சாதனைக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மற்றும் அவரை கல்வி பயணத்தில் ஊக்குவித்த பெற்றோர்களுக்கும்  இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


     

    ஜானுசா அவர்களின் இந்த வெற்றி எங்கள் பள்ளிக்கும், வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

    அவரது எதிர்கால கல்வி முயற்சிகள் மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத் தர மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟