வட்டுவாகல்.கொம்: வடக்கு மாகாண சுற்றுலா விருதுகள் -2025 - சிறந்த உணவு விருது (வட்டுவாகலிலிருந்து)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வடக்கு மாகாண சுற்றுலா விருதுகள் -2025 - சிறந்த உணவு விருது (வட்டுவாகலிலிருந்து)

Posted on
  • வெள்ளி, 2 ஜனவரி, 2026
  • by
  • in
  • Tags


  • வடக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சுற்றுலா விருது விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


    அந்த வகையில், எமது கிராமத்தைச் சேர்ந்த அ. இராமகிருஷ்ணன் (கிபிர்) அவர்கள்,
    “சிறந்த உணவு விருது (Best Food Award)” என்ற உயரிய விருதினை
    கிபிர் கேட்டரிங் – முல்லைத்தீவு சார்பில் பெற்றுக் கொண்டது எமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.


    உணவுத் துறையில் தரம், சுவை மற்றும் சிறப்பான சேவையை வழங்கி வந்ததற்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தனிப்பட்ட அவருடைய முயற்சிக்கும், அதேவேளை எமது கிராமத்திற்கும் கிடைத்த பெருமை ஆகும்.


    இந்த சாதனையின் மூலம் இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும்
    அ. இராமகிருஷ்ணன் (கிபிர்) அவர்களை



    எமது கிராம மக்கள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டி நிற்கின்றோம்.

    மேலும் பல உயரங்களைத் தொட்டு, தொடர்ந்தும் வெற்றிப் பாதையில் பயணிக்க வாழ்த்துகள்!



    Northern province Tourism Awards -2025
           Best food Award
    KIPIR CATERING (mullaitivu)
    Congratulations