வட்டுவாகல்.கொம்: செய்திகள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வடக்கு மாகாண சுற்றுலா விருதுகள் -2025 - சிறந்த உணவு விருது (வட்டுவாகலிலிருந்து)



வடக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சுற்றுலா விருது விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


அந்த வகையில், எமது கிராமத்தைச் சேர்ந்த அ. இராமகிருஷ்ணன் (கிபிர்) அவர்கள்,
“சிறந்த உணவு விருது (Best Food Award)” என்ற உயரிய விருதினை
கிபிர் கேட்டரிங் – முல்லைத்தீவு சார்பில் பெற்றுக் கொண்டது எமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.


உணவுத் துறையில் தரம், சுவை மற்றும் சிறப்பான சேவையை வழங்கி வந்ததற்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தனிப்பட்ட அவருடைய முயற்சிக்கும், அதேவேளை எமது கிராமத்திற்கும் கிடைத்த பெருமை ஆகும்.


இந்த சாதனையின் மூலம் இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும்
அ. இராமகிருஷ்ணன் (கிபிர்) அவர்களை



எமது கிராம மக்கள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டி நிற்கின்றோம்.

மேலும் பல உயரங்களைத் தொட்டு, தொடர்ந்தும் வெற்றிப் பாதையில் பயணிக்க வாழ்த்துகள்!



Northern province Tourism Awards -2025
       Best food Award
KIPIR CATERING (mullaitivu)
Congratulations 
மேலும் வாசிக்க...

வட்டுவாகல் பாலத்தின் மீதான நினைவுகளும், இயற்கையின் சீற்றமும்



இன்று, 29.11.2025, வெள்ளிக்கிழமை, வடக்கு கிழக்கில் நிலவும் கடும் மழை மற்றும் எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுவாகல் பாலத்தை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சுதந்திரமடைந்த பின்னர் 1955 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பாலம், அப்பகுதி மக்களின் தினசரிப் போக்குவரத்துப் பாதையாக மட்டுமல்லாது, பல தலைமுறைகளின் வாழ்விலும் நினைவுகளிலும் நீங்காத இடம்பிடித்த ஒரு முக்கியமான வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது.
மேலும் வாசிக்க...

எச்சரிக்கை - வட்டுவாகல் பாலம் பயன்படுத்தும் பொதுமக்களிற்கு அவசர வேண்டுகோள்.

 




தற்போதைய கனமழை காரணமாக வட்டுவாகல் பாலப்பகுதி சிறிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. சில இடங்களில் பயணம் செய்வது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மேலும் வாசிக்க...

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வினாவிடை போட்டி- சிவராசா ஜானுசா தேசிய வெற்றி-(படம் வீடியோ)


முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த  மாணவி சிவராசா ஜானுசா அவர்கள், நாடளாவிய ரீதியில் நடைபெற்ற HackX Jr. Inter School Hackathon 8.0 என்ற விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வினாவிடை போட்டியில் சிறப்பாக பங்கேற்று முதன்மை விருதைப் பெற்றார்.
மேலும் வாசிக்க...

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு - படங்கள்


வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள்  கௌரவ  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால்  இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...

வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடல் : அனர்த்த முகாமைத்துவ பிரிவு


 வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்.
மேலும் வாசிக்க...

முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 இறுதி நாள் இரவு பூசை நேரலை

 


முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 இறுதி நாள் மதிய பூசை நேரலையினை இந்த இணைய இணைப்பின் ஊடாகப் பார்வையிட முடியும் என்பதை உலக சப்த கன்னிமார் அடியார்களுக்கு அன்பாக அறியத்தருகின்றோம்.

மேலும் வாசிக்க...

முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 ஏழாம் நாள் இரவு பூசை நேரலை

 


முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 ஏழாம் நாள் இரவுப் பூசை நேரலையினை இந்த இணைய இணைப்பின் ஊடாகப் பார்வையிட முடியும் என்பதை உலக சப்த கன்னிமார் அடியார்களுக்கு அன்பாக அறியத்தருகின்றோம். 

நன்றி.

JJ Live வட்டுவாகல்

https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU

Please click Hire

https://www.youtube.com/live/dG2pDbUCkwU


https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU





 
மேலும் வாசிக்க...

வட்டுவாகல் பிரான்ஸ் உறவுகளின் அனுசரணையுடன் முல்லைக் கடற்கரையில் பட்டத்திருவிழா - படங்கள்

முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025இன்று பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பிரான்ஸ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.


அந்தவகையில் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.
அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிலையில் சிறார்கள் முதல் பெரியோர்வரை இணைந்து இந்தப் பட்டம்விடும் திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.


அந்தவகையில் முல்லைத்தீவு கடற்கரையெங்கும் அழகிய வண்ணப்பட்டங்கள் வானை அலங்கரித்தன.

மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் திருமதி.இராஜயோகினி ஜெயக்குமார், வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















மேலும் வாசிக்க...

கொழும்பில் வட்டுவாகல் சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி எழிலினிக்கு விருது : படங்கள்

தேசிய ஆக்கத்திறன் போட்டிகளுக்கான விருது வழங்கும் வைபம்  நேற்று 21.12.2024 இல் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது    எமது வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை மாணவி செல்வி ''லோகேஸ்வரன் எழிலினி'' அவர்கள் சாதனை புரிந்து சான்றிதழையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.


மேலும் வாசிக்க...

2024 பாதீட்டு நிதியில் முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ சப்த கன்னிமார் அறநெறிக்குத் தளபாடங்கள் அன்பளிப்பு

*

         2024 பாதீட்டு நிதியில் எமது சப்த கன்னிமார் அறநெறி பாடசாலைக்கு உதவும் படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கோரியிருந்தோம்.



அவர்களுள் முந்நாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் அவர்கள் எமது பாடசாலைக்கு ஒன்றரை இலட்சம் (150000/=) ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் கரைதுறைப்பற்றுப் பிரதேசச் செயலகம் ஊடாக எமக்கு வழங்கியுள்ளார். 



அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைப் பாடசாலையின் சார்பாகவும் எமது மாணவர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்
மேலும் வாசிக்க...

திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை , வட்டுவாகலில் புதிய பாலம் : பிரதிஅமைச்சர் உபாலி உறுதி?

 திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை ஏற்று வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதிஅமைச்சர் உபாலி; புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிப்பு





மேலும் வாசிக்க...

தேசிய ஆக்கத்திறன் போட்டி , இலக்கிய விழா சாதனைகள் : வட்டுவாகல் அறநெறி மாணவர்கள்

 *தேசிய ஆக்கத்திறன் போட்டி*


கடந்த 09-12-2023 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் நடைபெற்ற 2022-2023 ஆண்டுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் எமது சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி *செல்வி லோகேஸ்வரன் - எழிலினி* அவர்கள் எழுத்தாற்றலில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுக் தெரிவாகியுள்ளார்.



மேலும் வாசிக்க...

அல்லைக்கிழங்கு: வட்டுவாகல் மண்ணின் அரிய வகை சுவைமிகு இன்னுமொரு வளம்


இயற்கை அன்னையின் அரவணைப்பில் கம்பீரித்து நிற்கும் எம் கிராமத்தில் வட மாகாணத்தில் கிடைக்கும் சில அரிய ஆரோக்கியமான சுவைமிகு வளங்களும் கிடைக்கின்றன. குறிப்பபாக  மட்டி அல்லைக்கிழங்கு நாவல், கரம்பை  எனச் சிலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம்.  அல்லைக்கிழங்கானது 'வற்றாளங் கிழங்கை' ஒத்த ஒரு வகைக் கிழங்கு ஆகும். வற்றாளங் கிழங்கு இனிப்பாக இருக்கும். ஆனால் 'அல்லைக் கிழங்கு' இனிப்பாக இருக்காது. மணற்பாங்கான, வரண்ட உவர்நிலச் சிறுகாடுகளில் படர்ந்து வளர்ந்திருக்கும்.
மேலும் வாசிக்க...

வட்டுவாகலில் ஆலய பரிபாலன சபையினால் கும்மி அடித்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு

 
வட்டுவாகல் கிராமத்திற்கே  உரித்தானதும் பாரம்பரியம் ஆனதும்  ஆன கும்மி அடித்தல் நிகழ்வு நாளைய தினம்  ( 16/01/2022 திங்கள் கிழமை) வழமை போன்று நடைபெறும்

         மேற்படி கும்மி அடித்தல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற ஆலய பரிபாலன சபையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

கடற்படையின் காணி அளவீட்டு முயற்சி: வட்டுவாகல் மக்களின் எதிர்ப்பால் இடை நிறுத்தம்!


 முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ்மக்களுக்குரிய 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி 07.06.2022 இன்று காணிகளுக்குரிய பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க...

5பில்லியன் ரூபாய்கள் செலவில் வட்டுவாகல் பாலம் விரைவில் நிர்மாணிப்பு: பா உ திரு சுரேன்ராகவன்


முல்லைத்தீவு வட்டுவாகல் புதிய பாலம் விரைவில் நிர்மாணிக்கப் படுமாம். சுமார் 5பில்லியன் ரூபாய்கள் செலவாகலாம் என உத்தேசம்.பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் தெரிவிப்பு!

அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.

பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு

மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.

நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.

அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.

எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.

புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று

வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும்  வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.

இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன். 

நன்றி.

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.


இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி  05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது


https://www.vadduvakal.com/2020/01/blog-post.html








மேலும் வாசிக்க...

கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்

முல்லைத்தீவு வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட **விளாவூர் யுத்தம்** உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றி பல சாதனைகளை படைத்துள்ளது.
மேலும் வாசிக்க...

வெளி மாவட்ட உதைபந்தாட்டப் போட்டித்தொடரின் முதல் போட்டியில் உதயசூரியன் வெற்றி


வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகமானது முதற்தடவையாக வெளி மாவட்ட ரீதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் பங்குபற்றியது.
மேலும் வாசிக்க...

புதிதாக கட்டப்பட்ட வட்டுவாகல் நாக கன்னிகளிற்கு நாளை கும்பாபிசேகம்




புதிதாக கட்டப்பட்ட  வட்டுவாகலில் அமைந்துள்ள  நாக கன்னிகள் ஆலயத்தில் நாளை ‘கும்பாபிசேகம்’ நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் வாசிக்க...