வட்டுவாகல்.கொம்: அமரர்கள் திரு மு.ஆழ்வாப்பிள்ளை திருமதி ஆ.அன்னப்பிள்ளை ஞாபகார்த்த கோலப்போட்டி - படங்கள்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

அமரர்கள் திரு மு.ஆழ்வாப்பிள்ளை திருமதி ஆ.அன்னப்பிள்ளை ஞாபகார்த்த கோலப்போட்டி - படங்கள்

Posted on
  • சனி, 31 ஜனவரி, 2026
  • by
  • in
  •  அமரர்களான மு.ஆழ்வாப்பிள்ளை .அன்னப்பிள்ளை ஞாபகார்த்த கோலப்போட்டி இன்று வட்டுவாகலில் நடைபெற்றதுபாரம்பரியமாக மார்கழிமாதம் முதல்நாள் தொடங்கி பொங்கல் அடுத்த நாள் வரை காலை கோலம் இட்டு கன்னிப்பெண்கள் வழிபடுவது வழக்கமாக கடைப்பிப்பார்கள்இவ் வழிபாடு அருகிவருவதை அவதானித்து கோலப்போட்டி   இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டு   ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



    காலை 10:00 மணியளவில் வட்டுவாகலில் கிராமசேவையாளர் திருமதி கௌ.கௌசல்யா அவர்கள் முன்னிலையில் போட்டி ஆரம்பமாகி நிறைவுபெற்றுள்ளது.

    நடுவர்களாக

    திரு S.சதீஸ்வரன்

    திரு T.மிரோயன்

    திரு Y.அரசகுமார்

    உதவியாளராக

    ஆசிரியர்கி.பிரியதர்சினி

    படப்பிடிப்பு

    ஆசிரியர் ஜெ.யுகிந்தன்

    இணைந்து சிறப்புற போட்டியை நிறைவு செய்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

     

    *கோலப்போட்டி-2026*

    *முதலாம் இடம்*-

    ஶ்ரீதரன்-தரன்சிகன்

    *இரண்டாம் இடம்*-

    ராஜ்குமார்-பகிரதன்

    *மூன்றாம் இடம்*

    சுதன்-குயின்சினி





















    போட்டியில் பங்குபற்றியவர்கள் அனைவரும் ஆறுதல் பரிசை பெற்றுக்கொள்வார்கள்போட்டியாளர்கள் பாரட்டப்படவேண்டியவர்கள்மழை பெய்த போதும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தார்கள்.

    நன்றி

    *விழா ஏற்பாட்டுக்குழு