வட்டுவாகல்.கொம்: துயர்பகிர்வு:அமரர் திருமதி தியாகராசா மகாலட்சுமி அவர்கள் வட்டுவாகல் முல்லைத்தீவு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

துயர்பகிர்வு:அமரர் திருமதி தியாகராசா மகாலட்சுமி அவர்கள் வட்டுவாகல் முல்லைத்தீவு


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் , வட்டுவாகலை வதிவிடமாகவும்கொண்ட அமரர் திருமதி மகாலட்சுமி தியாகராஜா (ஓய்வு பெற்ற நீதிமன்ற பதிவாளர் ) அவர்கள் இன்றைய தினம் இறைபதமடைந்தார் . 

அன்னார் காலஞ்சென்ற திரு தியாகராசாவின் (முன்னாள் கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், நாகரூபன் (பிரான்ஸ்)ஜனனி, (சுவிஸ்) அச்சுதன்  (தொழில் நுட்ப உத்தியோகத்தர்)  ஆகியோரின் அன்புத் தாயாரும் ,  கஜுவனா, கிஷான், ரேணுகா, ஆகியோரின் பாசமிகு மாமியாரும் அதீரன், மகதி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார் . 

இறுதிக் கிரியைகள் நாளை 22.03.2021 பிப 3.00 மணியளவில் புதுக்குடியிருப்பிலுள்ள  அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று இறுதிக் கிரியைகளுக்காக புதுக்குடியிருப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.



1 Comments :

Unknown சொன்னது…

அமரத்துவம் அடைந்த திருமதி தியாகராசா மகாலடசுமி அவர்கள்
பிரிவால் துயர் அடைந்த பிள்ளைகள், உற்றார், உறவுகள் நண்பர்கள்
அனைவர்க்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் .

மயில்வாகனம் குடும்பம்